திட்டம் தீட்டிய விராட், ரோஹித்; செய்து காட்டிய சிராஜ் - வைரல் காணொளி!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிபெறும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரவில் பனிப்பொழிவு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இந்திய அணி இப்படியான முடிவை எடுத்திருக்கிறது.
இந்திய அணியின் தரப்பில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஷுப்மன் கில் அணியில் இடம் பிடித்து இருக்கிறார். இஷான் கிஷான் வெளியேற்றப்பட்டு ஸ்ரேயாஸ் தொடர்கிறார். முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் எந்த மாற்றங்களும் கடந்த ஆட்டத்தில் இருந்து செய்யப்படவில்லை.
இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒன்றாக காணப்படுகிறது. ஆடுகளத்தில் புற்கள் ஏதும் இல்லை. மேலும் பந்தும் பெரிய அளவில் சுழலவில்லை. பவுன்சரும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இருவரும் சிரமம் இல்லாமல் விளையாட ஆரம்பித்தார்கள். பும்ரா ஒரு முனையில் கட்டுப்பாடாக வீச, இன்னொரு முனையில் சிராஜ் முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகள் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்தடுத்த அவருடைய ஓவர்களில் பெரிய தாக்கம் எதுவும் வெளிப்படவில்லை. இந்த நிலையில் ஓவர்களுக்கு இடையில் விராட் கோலி ரோஹித் சர்மாவிடம் கொஞ்சம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு அடுத்து மீண்டும் அடுத்த ஓவருக்கு வந்த முகமது சிராஜ் இடம் கேப்டன் ரோஹித் சர்மா பேசினார். அதற்கு அடுத்த பாலில் கிராஸ் சீமில் பந்தை உள்ளே கொண்டு வந்து அப்துல்லா சபிக்கை எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் முகமது சிராஜ்.
இந்திய மூத்த வீரர்களின் கூட்டு திட்டத்தில் பாகிஸ்தான அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. பத்து ஓவர்கள் முடிவில் 49 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுத்திருந்தது. தற்சமயத்தில் இமாம் உல்ஹாக் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுல் கேட்ச் மூலம் கைப்பற்றி இருக்கிறார். இதனால் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.