அபார கேட்ச் பிடித்து அசத்திய சிராஜ் - வைரல் காணொளி!
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டொமினிகாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெப்டன் கிரேக் பிராத்வைட் - டெக்நரைன் சந்தர்பால் இணை நிதான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 12 ரன்களை எடுத்திருந்த டெக்நரைனையும், 20 ரன்களைச் சேர்த்திருந்த கிரேக் பிராத்வைட்டையும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்.
அதன்பின் களமிறங்கிய ரெய்மன் ரெய்ஃபெர் 2 ரன்களுக்கு ஷர்தூல் தாக்கூரிடம் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த பிளாக்வுட்டும் முகமது சிராஜின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அதிலும் பின்னோக்கி சென்று அந்த கேட்சை சிராஜ் பிடித்த போது தடுமாறி கிழே விழுந்த்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் பிளாக்வுட் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய முகமது சிராஜின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.