அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்தியர் நியமனம்!

Updated: Sun, Dec 12 2021 15:58 IST
Monank Patel named USA's full-time white-ball skipper (Image Source: Google)

கிரிக்கெட் விளையாட்டில் புதிதாக தடம்பதித்து வரும் அமெரிக்க அணி சமீப காலமாக மிகச்சிறப்பான ஆட்டங்களை விளையாடி வருகிறது.

அந்தவரிசையில் தற்போது பல நாடுகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் தற்போது அமெரிக்க அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர். 

இந்நிலையில் அமெரிக்க அணி வருகின்ற 22ஆம் தேதில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. மேலும் ஐசிசி மெம்பர் நேஷன் அணியுடன் அமெரிக்கா விளையாடும் முதல் தொடராகவும் இது அமையவுள்ளது.

இதற்கிடையில் இத்தொடருக்கான அமெரிக்க அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் குஜராஜ் மாநிலத்தில் பிறந்த இவர், அமெரிக்க குடியுரிமைப் பெற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அமெரிக்க அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 அணி: மொனாக் படேல் (கேப்டன்), கரிமா கோர், ஆரோன் ஜோன்ஸ், மார்டி கெய்ன், அலி கான், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, சேவியர் மார்ஷல், சௌரப் நேத்ரவல்கர், நிசார்க் படேல், கஜானந்த் சிங், ஜெஸ்ஸி சிங், ஸ்டீவன் டெய்லர், ரஸ்டி தெரோன், வாட்ஸ் வகேலா.

ஒருநாள் அணி: மொனாக் படேல் (கேப்டன்), ராகுல் ஜரிவாலா, ஆரோன் ஜோன்ஸ், நோஸ்துஷ் கென்ஜிகே, அலி கான், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, சேவியர் மார்ஷல், சுஷாந்த் மோதானி, சௌரப் நேத்ரவல்கர், நிசார்க் படேல், கஜானந்த் சிங், ஜெஸ்ஸி சிங், ஸ்டீவன் டெய்லர், வத்சல் வகேலா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை