விளையாட்டும் இங்கே எளிதானதும் இல்லை - பாட் கம்மின்ஸ்!

Updated: Fri, Oct 20 2023 11:48 IST
Image Source: Google

நடப்பு உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதும், அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளுக்கான கணிப்புகள் மாற ஆரம்பித்தது. அதன்பின், இங்கிலாந்து அணியை அடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி வெல்லவும், இந்த கணிப்புகளில் பெரிய அளவு மாற்றம் உருவாக ஆரம்பித்தது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளிடம் தோல்வி அடைய, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு பெரிய நெருக்கடி உருவானது. இப்படியான நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததும், பின்னடைவில் இருக்கின்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அரை இறுதி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகி இருக்கின்றன. 

தென் ஆப்பிரிக்க அணி கையில் இருந்த ஒரு நல்ல வாய்ப்பை நெதர்லாந்து மாதிரியான ஒரு அணியிடம் தோற்று கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக அமைகிறது. இந்த போட்டியில் தோற்கும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் “ஆமாம் நான் இதை சொல்வது நல்லது. நான் பொய் சொல்ல மாட்டேன். நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வென்றது, இது எல்லா அணிகளுக்குமான வாய்ப்புகளை சமன் செய்கிறது என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நாம் பார்க்கின்ற பத்து அணிகளும் போட்டியிடக் கூடிய தகுதியான அணிகள். 

அந்தத் தகுதி இருந்த காரணத்தினால்தான் அவர்கள் தேர்வு பெற்று உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறார்கள். இது வெறும் நம்பர்ஸ் கிடையாது. யாருக்கும் எந்த விளையாட்டும் இங்கே எளிதானதும் இல்லை. பாகிஸ்தான் அணி நல்ல விதத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. அவர்களிடம் சேதாரங்களை உருவாக்கக்கூடிய நல்ல சில வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். 

சில சுழற் பந்துவீச்சாளர்களும் 20 ஓவர்கள் வீசக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள்.பின்னர் அவர்களிடம் பாபர் அசாம் முகமது ரிஸ்வான் போன்ற நல்ல பேட்ஸ்மேன் இருக்கிறார்கள். அவர்கள் சமீப காலத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை