இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டு ரசிக்கும் எம் எஸ் தோனி - காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. இந்த போட்டியைக் காண பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் துபாய்க்கு வந்துள்ளனர், அதே நேரத்தில் இந்திய அணிக்கு உள்நாட்டிலிருந்தும் நிறைய ஆதரவு கிடைத்து வருகிறது. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதரவும் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
தற்போது, எம்எஸ் தோனி மற்றும் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ஆகியோர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து அணிக்கு ஆதரவாக தெரிவிக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இருவரும் தற்போது படப்பிடிப்பு தளத்தில் உள்ள நிலையில், அங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியை தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்து வருகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடருடன் அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதால், இந்தாண்டு ஐபிஎல் தொடர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
இப்போட்டி குறித்து பேசியனால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் 23 ரன்களிலும், இமாம் உல் ஹக் 10 ரன்னிலு விக்கெட்டை இழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் - கேப்டன் முகமது ரிஸ்வான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் முகமது ரிஸ்வான் 46 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடிய சௌத் சகீலும் 62 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அணி 159 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
Pakistan Playing XI: இமாம் உல் ஹக், பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன்), ஆகா சல்மான், தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது.
Also Read: Funding To Save Test Cricket
India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி.