சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த மகேந்திர சிங் தோனி!

Updated: Sat, Mar 29 2025 12:00 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் கோட்டை என்றழைக்கப்படும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தின் 17 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். 

அந்த வகையில் இப்போட்டியில் மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 4687 ரன்களை எடுத்த முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது மகேந்திர சிங் தோனி 4699 ரன்களைச் சேர்த்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்கள்

  • 4699 - எம்எஸ் தோனி (204 இன்னிங்ஸ்)*
  • 4687 - சுரேஷ் ரெய்னா (171 இன்னிங்ஸ்)
  • 2721 - ஃபாஃப் டு பிளெசிஸ் (86 இன்ஸ்)
  • 2433 - ருதுராஜ் கெய்க்வாட் (67 இன்னிங்ஸ்)
  • 1939 - ரவீந்திர ஜடேஜா (127 இன்ன்ஸ்)

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 32 ரன்களையும், விராட் கோலி 31 ரன்களையும் சேர்க்க, அணியின் கேப்டன் ரஜத் படிதர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் தனது பங்கிற்கு 22 ரன்களைச் சேர்த்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை