ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக வீரர்கள் தற்போதிலிருந்தே பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் தோனி தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த எம் எஸ் தோனி, இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை உள்ளிட்ட ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தியது மட்டுமின்றி சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்து தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

Advertisement

மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதுவரை 14 முறை வழிநடத்தியுள்ள தோனி 5 முறை கோப்பையை வென்று கொடுத்து, அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். தற்போது 42 வயதை எட்டியுள்ள எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக 6ஆவது முறையாக கோப்பையை வென்று கொடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் எம்எஸ் தோனி பயிற்சி மேற்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதிலும் குறிப்பாக அவர் பயன்படுத்திய பேட்டில் 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  அதன்பின் அது தோனியின் நெருங்கிய நண்பரான பரம்ஜித் சிங்கின் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ கடைசியின் ஸ்டிக்கர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பரம்ஜித் சிங் மீது ஊடகங்களின் கவனம் திரும்பியனது. அதில் தான் தற்போது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி தனது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி எம் எஸ் தோனி தான் பயிற்சி மேற்கொண்ட கிரிக்கெட் போட்டை தனது கையொப்பமிட்டு பரம்ஜித் சிங்கிற்கு பரிசாக வழங்கியுள்ளார். அதனை பரம்ஜித் சிங் தனது சமீபத்திய பேட்டியில் ரசிகர்களிடன் காட்டியுள்ளார். ‘பிரைம் ஸ்போர்ட்ஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த பேட்டில் தோனியின் கையோப்பம் இருப்பதையும் தெளிவாக காணலாம்.

இதுகுறித்து அந்த பேட்டியில் பேசியுள்ள பரம்ஜித் சிங், “நான் தோனியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் அவர் எப்போதும் எங்களுக்காக இருக்கிறார். இதுதான் எங்களுடைய நட்பு. அதில் அவர் தான் நம்பர் ஒன்” என்று கூறியதுடன், தோனி தனக்கு பரிசாக கொடுத்த பேட்டையும் வெளிப்படுத்தினார். இந்நிலையில் பரம்ஜித் சிங்கின் இந்த கணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News