பேட்டிங்கில் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம் - எஸ் எஸ் தோனி!

Updated: Mon, Apr 21 2025 11:51 IST
Image Source: Google

மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் முந்தைய தோல்விக்கும் மும்பை இந்தியன்ஸ் பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி, “இந்த போட்டியில் நாங்களில் பேட்டிங்கில் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம். மேலும் இந்த மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் நிச்சயம் பனிப்பொழிவு வரும் என்பது தெரியும். மேற்கொண்டு உலகின் மிகச்சிறந்த டெத் பந்துவீச்சாளர் பும்ரா இருக்கிறார் என்பதும் தெரியும். மேலும் இன்று அவர் தனது டெத் பந்துவீச்சை சீக்கிரமாகவே தொடங்கினார்.

​​நாங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு அதிரடியான ஆட்டத்தை சற்று சீக்கிரமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் விரைவாக ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம். எங்களிடம் சில கேள்விக்குறிகள் உள்ளன. அதனால் நாங்கள் அதனை சரிசெய்ய முயற்சி செய்துவருகிறோம். இனி இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஒருவேளை தோல்வியடைந்தாலும் அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்க முயற்சிப்போம்.

ஆயுஷ் மத்ரே மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் உங்கள் ஷாட்களை விளையாடும் அதே நேரத்தில் உங்கள் ஷாட்களைத் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறைதான் உங்களுக்குத் தேவை. அவர் சென்று தனது ஷாட்களை விளையாடினார், நாங்கள் அவரை அதிகம் பார்த்ததில்லை. எனவே, அவர் தொடர்ந்து ஷாட்களை விளையாட முடிந்தால், நடுத்தர மற்றும் கீழ் வரிசையில் வீரர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்துமுதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்களையும், ஷிவம் தூபே 50 ரன்களையும், அறிமுக வீரர் ஆயூஷ் மாத்ரே 32 ரன்களையும் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 77 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை