மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தோனி; காரணம் இதுதான்!

Updated: Wed, May 31 2023 21:56 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இந்த தொடரின் லீக் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி  விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் விளையாடி விளையாடினார்.

இந்த நிலையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான பல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்திற்கும் இதே கோகிலாபென் மருத்துவனையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த காயத்தின் நிலைமையை பொறுத்தே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும் என்பதனை சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் உறுதி செய்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை