பிரபல சமூக வலைதளப்பக்காமான ட்விட்டர் தனது வாடிக்கையாளரின் பக்கத்தின் உண்மைத்தன்மையை சோதித்து அங்கீகரித்துவிட்டால் அதற்காக 'வெரிஃபைட் டிக்' வழங்குகிறது. ப்ளூ பேட்ஜ் என்றழைக்கப்படும் இந்த நீல நிற டிக் வழங்கப்படுகிறது.

Advertisement

பெரும்பாலும் அரசியல் தலைவர்கள், நாட்டின் பிரதமர், அதிபர் போன்றோர், உயரதிகாரிகள், சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்கள் போன்றோர் தங்களின் ட்விட்டர் கணக்கை வெரிஃபைட் செய்து கொள்கின்றனர். பிரபலங்கள் பெயரின் மூலம் போலி கணக்கை உருவாக்கி அதில் சர்சைக்குரிய, அவதூறு கருத்துகளை யாரேனும் வெளியிடுவதிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ப்ளூ பேட்ஜ் உதவுகிறது.

Advertisement

ஆனால், இந்த ப்ளூ டிக் வசதி பெற்றவர்களின் அவர்தம் கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ட்விட்டர் அவர்களது ப்ளூ பேட்ஜை நீக்கிவிடுகிறது. இது ட்விட்டர் நிறுவனத்தின் விதிமுறையாக உள்ளது.

தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ பேட்ஜ் நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 8.20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தோனி கடைசியாக கடந்த ஜனவரி 8 ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்ட்ராபெர்ரி தோட்ட வீடியோவுக்கான லிங்க்கை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரது ட்விட்டர் கணக்கில் எதுவும் பதிவாகவில்லை. இதன் காரணமாகவே அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருப்பதாக கூட்டப்பட்டது. ஆனால், ட்விட்டர் நிறுவனம் எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

Advertisement

தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கெட் நீக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் #buetick என்ற ஹேஷ்டாக்கும் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனாது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மீண்டும் மகேந்திர சிங் தோனியின் பக்கத்திற்கு ப்ளூ பேட்ஜை வழங்கியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News