சர்வதேச போட்டிக்கு திரும்பும் முகமது அமீர்?

Updated: Mon, Jun 14 2021 20:21 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இன் போது இந்திய அணி விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 

இந்நிலையில், தனக்கு பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. மன ரீதியாக தனக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாக முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் திடீரென தனது ஓய்வை அறிவித்தார். 28 வயதே ஆகும் அவர் ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. இதையடுத்து அவர் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 

ஆனால் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைமை நிர்வாக அலுவலர் வாசிம் கான் பிஎஸ்எல் தொடருக்கு முன்னதாக முகமது அமீரை அவரது வீட்டில் சந்தித்து பேசியதை அடுத்து அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய முகமது அமீர்,“நான் எப்போது பேசினால் மக்கள் அதற்கு ஒரு முத்திரை குத்துகிறார்கள். நான் ஓய்வு பெறும் முடிவை எடுத்ததற்கு பல மோசமான அனுபவங்களை சந்தித்தது தான் காரணம். ஆனால் வாசிம் கான் என் வீட்டிற்கு வந்து என்னை மீண்டும் அணியில் சேர்க்க பேசுவதில் நிறைய அர்த்தம் உள்ளது. எனது திட்டங்களின் படி அனைத்தும் நடந்தால், நான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::