பிஎஸ்எல் 2021, இறுதிப் போட்டி: பெஸ்வர் ஸால்மி vs முல்தான் சுல்தான்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அபுதாபியில் நடைபெற்று வரும் 6ஆவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர், இறுதி கட்டத்தை எட்டி விட்டது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் ஏற்கெனவே கோப்பையை வென்றுள்ள பெஸ்வர் ஸால்மி அணி, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : பெஸ்வர் ஸால்மி vs முல்தான் சுல்தான்ஸ்
- மைதானம் : ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் : இரவு 9.30 மணி
போட்டி முன்னோட்டம்
முல்தான் சுல்தான்ஸ்
முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு சீசனில் பல சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதிலும் அணியின் தொடக்க வீரர்கள் ஷான் மசூத், ரிலே ரஸ்ஸோவ், ஜான்சன் சார்லஸ் என பல அதிரடி வீரர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலனாக அமைந்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை ஷான்நவாஸ் தானி, இம்ரான் தாஹிர் ஆகியோர் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், நிச்சயம் இந்த ஜோடி எதிரணிக்கு சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம் முதல் முறையாக பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முல்தான் சுல்தான்ஸ் அணி தகுதிப் பெற்றுள்ளதால், நிச்சயம் கோப்பையை வெல்லும் முனைப்போடு களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெஸ்வர் ஸால்மி
வஹாப் ரியாஸ் தலைமையிலான் பெஸ்வர் ஸால்மி அணி நடப்பாண்டு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.
அணியில் ஹஸ்ரதுல்லா ஸஸாய், அறிமுக வீரர் ஜானதன் வெல்ஸ், சோயிப் மாலிக், இமாம் உல் ஹக் என அதிரடி ஆட்டகாரர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.
பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், முகமது இர்ஃபான், ரோமன் பாவல், ஃபாபியன் ஆலன் ஆகியோர் உள்ளதால் பெஸ்வர் ஸால்மி அணியின் வெற்றி வாய்ப்பு ஏறத்தாள உறுதியாகிவுள்ளது.
மேலும் 2017ஆம் ஆண்டு பெஸ்வர் ஸால்மி அணி பிஎஸ்எல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதால், இரண்டாவது முறையும் கோப்பையை வெல்லும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் : 8
- பெஸ்வர் ஸால்மி : 3
- முல்தான் சுல்தான்ஸ் : 5
உத்தேச அணி
முல்தான் சுல்தான்கள் - ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கே), சோஹைப் மக்சூத், ரிலே ரோசோவ், ஜான்சன் சார்லஸ், குஷ்டில் ஷா, சோஹைல் தன்வீர், இம்ரான் தாஹிர், இம்ரான் கான், முசரபானி, ஷான்நவாஸ் தனி.
பெஷாவர் ஸல்மி - ஹஸ்ரதுல்லா ஸஸாய், கம்ரான் அக்மல், ஜானதன் வெல்ஸ், சோயப் மாலிக், ரோவ்மன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், அமட் பட், வஹாப் ரியாஸ் (கே), உமைத் ஆசிப், முகமது இம்ரான், முகமது இர்ஃபான்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான்
- பேட்ஸ்மேன்கள் - ஷோயிப் மாலிக், ஹஸ்ரதுல்லா ஸஸாய், குஷ்டில் ஷா, ஜான்சன் சார்லஸ், சோஹைப் மக்சூத்
- ஆல்ரவுண்டர்கள் - ரோவ்மன் பவல், சோஹைல் தன்வீர்
- பந்து வீச்சாளர்கள் - வஹாப் ரியாஸ், இம்ரான் தாஹிர், ஆசீர்வதிக்கும் முசரபானி