ஐபிஎல் 2025: ஆயுஷ் மத்ரேவை ஒப்பந்தம் செய்யும் சிஎஸ்கே?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணிகள் தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளன.
குறிப்பாக இந்த மூன்று அணிகளும் இதுவறைய விளையாடியுள்ள 6 போட்டிகளில் தலா ஒரு வெற்றி மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்கின்றனர். இதனால் இந்த அணிகளின் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ள. குறிப்பாக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி சில போட்டிகளாகவே பேட்டிங்கில் சோபிக்க தவறிவருவதே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறங்கியுள்ளது. அந்தவகையில் நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருவரைக் கண்டுபிடித்துள்ளது.
அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக மும்பை தொடக்க வீரர் ஆயுஷ் மத்ரேவை சிஎஸ்கே அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 17 வயதான மத்ரே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததை அடுத்து, மாத்ரேவுக்கு சிஎஸ்கே அணி வாய்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஆயுஷ் மத்ரே மும்பை அணிக்காக இதுவரை ஒன்பது முதல் தர போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில், இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்தை அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பை தொடரின் போது நாகாலாந்துக்கு எதிராக 181 ரன்களும், சௌராஷ்டிராவுக்கு எதிராக 148 ரன்களும் எடுத்திருந்தார். இதன் காரணமாக, ஆயூஷ் மாத்ரே கூடிய விரையில் சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.