மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோஹித் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களை குவித்தது. 

Advertisement

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரைத் தவிற மற்ற யாரும் சரிவர விளையாடாத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 205 ரன்கலை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்ளது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த வெற்றிக்காக நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். எங்கள் மனதில் இருந்து தோல்விகளை மறந்து, இப்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொண்டோம்.  நாங்கள் திட்டங்களுக்கு ஏற்ப ஆர்டரை மாற்றினாலும், எங்களது பிளேயிங் 12 இதுவாகவே இருக்கும்.

கடந்த சில நாள்களாக எங்களது ஓய்வறையில் ஏராளமான அன்பு சூழ்ந்திருந்தது. அதில் ஒருவருக்கொருவர் ஆதரித்து தங்களது ஒத்துழைப்பை கொடுத்துவருகிறோம். இதுலிருந்து மீண்டு வரு எங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு வெற்றிதான் தேவைப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இப்போட்டியின் முதல் 6 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கும் அதிகமான ரன்களைச் சேர்த்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டனர். 

ரொமாரியோ செஃபெர்டின் அதிரடி பிரம்மிப்பாக அமைந்தது. அவர் தான் இந்த வெற்றியை எங்களுக்கு பெற்று கொடுத்துள்ளார். அவர் அடித்த ரன்களுக்கும், டெல்லி அடித்த ரன்களுக்கும் தான் இப்போட்டியில் வித்தியாசத்தை கொடுத்துள்ளது. எப்போது முகத்தில் சிரிப்புடன் மகிழ்ச்சியாக இருப்பார். எந்த சவாலுக்கும் தயாராக இருப்பார். இன்றைய ஆட்டத்தில் பவுலிங் செய்யாததற்கு எந்த காரணமும் இல்லை. சரியான நேரத்தில் நான் பவுலிங் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News