ஐபிஎல் 2025: எஞ்சிய போட்டிகளில் விளையாடும் ட்ரென்ட் போல்ட்; மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Wed, May 14 2025 15:23 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இதனால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதேசமயம்  எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மே 26ஆம் தேதியுடன் நாடு திரும்ப வேண்டுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அதன்படி எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் வகையில் தொடரில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்து வீரர்களும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாடவுள்ளதால் அவர்களும் பங்கேற்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இந்நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அறிவித்துள்ளார். இந்த சீசனின் மெகா ஏலத்தில் மும்பை அணியின் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக 36 வயதான போல்ட் இருந்தார், அவரை அந்த அணி ரூ.12.5 கோடிக்கு வாங்கியது. மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான பந்து வீச்சாளராகவும் டிரென் போல்ட் இருந்து வருகிறார்.

இத்தொடரில் அவர் விளையாடிய 11 போட்டிகளில் 8.49 என்ற எகானமி விகிதத்தில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் கூட்டாக நான்காவது இடத்தில் உள்ளார். இதுதவிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், போல்ட் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததான் மூல்ம் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். 

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி எஞ்சிய போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பீளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற சூழ்நிலையில், ட்ரெண்ட் போல்ட் விளையாடுவது அணிக்கு பெரும் பலமாக இருக்ககூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸில் இடம்பிடித்துள்ள ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ், வில் ஜேக்ஸ் உள்ளிட்டோர் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவது தற்போது வரையிலும் உறுதிப்படுத்த படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை