ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்!

Updated: Mon, Dec 25 2023 12:56 IST
ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்! (Image Source: Google)

இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வீரர்கள் ஏலுமும் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது. 

அதற்கு முன்னதாக ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வீரர்கள் டிரேடிங் முறையில் மாற்றம் செய்யப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் செய்தது. அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா அப்பதவியிலிருந்து நீக்கி, ஹர்த்திக் பாண்டியாவை கேப்டானக நியமியத்தது.

மேலும் ரோஹித் சர்மா 3 ஆண்டுகளாக கேப்டனாக கோப்பை வெல்லாத சூழலில், அவர் 36 வயதை எட்டியதை காரணமாக வைத்து அவரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்தது. ஆனால் அதற்கு முன் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உயர்ந்த பின், குஜராத் அணி நிர்வாகத்திடம் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் கோரியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவின் கோரிக்கைகளை ஏற்றுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்க, குஜராத் அணி நிர்வாகம் தரப்பில் பணத்தின் மூலமாக ஒப்பந்தம் முடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடி ஒப்பந்தம் போக, நிர்வாகங்களுக்கு இடையில் ரூ.100 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் விதிகளின் படி வீரர்களுக்கான ஒப்பந்த தொகை போக, அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்குவதற்கும் இன்னொரு தொகை அளிக்கப்படும். அதாவது ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான ஒப்பந்தம் தொகை ரூ.15 கோடியாகும்.

அதனை தவிர்த்து ஹர்திக் பாண்டியாவை அளிப்பதற்கு மும்பை அணி தரப்பில் ஒரு குறிப்பிட்ட தொகை குஜராத் அணிக்கு அளிக்கப்படும். அந்த தொகை சம்மந்தப்பட்ட அணிகளுக்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் மட்டுமே தெரியும். இதனால் மும்பை அணி நிர்வாகம் விதிகளுக்கு புறம்பாக ரூ.100 கோடி அளிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டே மும்பை அணி நிர்வாகம் செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை