GT vs MI: ஹர்திக் பாண்டியா வருகை; மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!

Updated: Fri, Mar 28 2025 20:08 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெற இருக்கும் 9ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொஅட்ரில் இரு அணிகளும் தோல்வியைச் சந்தித்த பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளன.

இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் வகையில் அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் விளையாடவுள்ளார். முன்னதாக ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அவரால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார். 

இப்போது ஹர்திக் பாண்டியா இப்போட்டியில் விளையாடுவார் என்பதால், அந்த அணியின் லெவனில் இருந்து இளம் வீரர் ராபின் மின்ஸ் நீக்கப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய ராபின் மின்ஸ் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இப்போட்டியில் அவர் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவரது இடத்தில் ஹர்திக் பாண்டியா களமிறங்க வாய்ப்புள்ளது. 

இதுதவிர்த்து இப்போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் விளையாடிய சத்யநாராயண் ராஜு முதல் போட்டியில் ஒரு ஓவரை மட்டுமே வீசிய காரணத்தால் இப்போட்டியில் அவருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கர் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்யநாராயண் ராஜு. இம்பாக்ட் வீரர் - விக்னேஷ் புதூர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை