வங்கதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!

Updated: Wed, Oct 23 2024 09:22 IST
Image Source: Google

வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியானாது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கைல் வெர்ரைன் மற்றும் வியான் முல்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கைல் வெர்ரைன் சதமடித்து அசத்தியதுடன் 114 ரன்களையும், மறுபக்கம் அரைசதம் கடந்த வியான் முல்டர் 54 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல அவுட்டானது.

இதனையடுத்து 202 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஷாத்மான் இஸ்லாம் ஒரு ரன்னிலும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 23 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது. இதில் மஹ்முதுல் ஹசன் 38 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 28 ரன்களைச் சேர்த்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 6000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் படைத்துள்ளார். இதுவரை வங்கதேச அணிக்காக 93 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹிம், 11 சதம் மற்றும் 27 அரைசதங்களையும் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் வீரர் தமிம் இக்பால் 5134 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை