தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !

Updated: Tue, May 25 2021 17:56 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடுமையான பயோ பபுள் விதிமுறைகளுக்கு மத்தியில் பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் டிம் செய்ஃபெர்டிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தற்போது அவரும் தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தனது கரோனா அனுபவங்களை டிம் செய்ஃபெர்ட்  கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,  “சிஎஸ்கே மேலாளர் என்னிடம் கரோனா உறுதியானதை காண்பித்தார். எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என பெரும் பயம் ஏற்பட்டது. எனக்கு எதோ தவறாக நடக்கிறது என்ற பயம் ஏற்பட்டது. அது மிகவும் மோசமான நாட்கள் அது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::