மகாராஜா கோப்பை 2024: கார்த்திக், கருண் நாயர் அசத்தல்; கோப்பையை வென்றது மசூர் வாரியர்ஸ்!
கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வந்த மஹாராஜா கோப்பை டி20 லீக் தொடரானது நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் மசூர் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியானது பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணியில் கார்த்திக் சிஏ 3 ரன்கலை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் இணைந்த கார்த்திக் மற்றும் கேப்டன் கருண் நாயர் இணை அதிரடியாக விளையாடிதுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன், இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். பின்னர் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்த நிலையில் கார்த்திக் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்ஷில் தரமானி 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கருண் நாயர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 66 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மனோஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 44 ரன்களைக் குவித்து அணிக்கு தேசையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி தரப்பில் நவீன் எம்ஜி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர் அணியில் எல்ஆர் சேத்தன் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் மயாங்க் அகர்வால் 6 ரன்களிலும், புவன் ராஜு ஒரு ரன்னிலும், ஷிவ்குமார் ரக்ஷித் 5 ரன்களிலும், ஷுபாங் 5 ரன்களிலும், சுராஜ் அவுஜா 8 ரன்களிலும், அனிருது ஜோஷி 18 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த நிலையில் 51 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து களமிறங்கிய கிராந்தி குமார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு பிளாஸ்டர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. மேலும், இப்போட்டியில் அரைசதம் கடந்த எஸ்யு கார்த்திக் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் தொடர் நாயகன் விருதையும் வென்றுனர்.