நஹித் ரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த கேன் வில்லியம்சன்; காணொளி!
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை நஹித் ரானா வீசிய நிலையில், அந்த ஓவரின் 3ஆவது பந்தை எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் அதனை கவர் டிரைவ் அடிக்க முயற்சித்த நிலையில், பந்து அவரின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 5 ரன்களுடன் நடையைக் கட்டினர். இந்நிலையில் கேன் வில்லியம்சன் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கேன் வில்லியம்சனின் ஃபார்ம் கவலைகுறியதாக உள்ளது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் சோபிக்க தவறிய கேன் வில்லியம்சன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்திருந்தார். இந்நிலையில் தற்போது வங்கதேசத்திற்கு எதிராகவும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளதுடன், நியூசிலாந்து அணி மீதான அழுத்ததையும் அதிகரித்துள்ளது.
இப்போட்டியைப் பற்றி பேசினால், இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜகர் அலி 45 ரன்களைச் சேர்த்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களில் சுருண்டது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ரன்கள் ஏதுமின்றியும் கேன் வில்லியம்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் டெவான் கான்வே 30 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், ரச்சின் ரவீந்திரா அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேசம் பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தஃபிசூர் ரஹ்மான்