கான்பூரில் நடைபெற்ற இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. 

Advertisement

அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியதுடன் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும், இத்தொடரில் சதம் மற்றும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன், “நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். எங்களுடைய பேட்ஸ்மேன் எல்லோருமே 30, 40 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் களமிறங்கும்போது, பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்பது முக்கியம்.

அதேசமயம் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியொர் சிறப்பாக விளையாடினர். அந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அவர்களுடைய பேட்டிங் அமைந்தது. அப்படியான தருணங்களில் ஒரு பந்துவீச்சு யூனிட்டாக நாம் அவர்களின் விக்கெட் வீழ்த்திருக்க வேண்டும். இப்போட்டியில் மொமினுல் பேட்டிங்கிலும், மெஹிதி ஹசன் மிரஸ் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் ஒன்றாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News