ஒரு அணியாக நாங்கள் மேம்பட வேண்டியது அவசியம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!

Updated: Thu, Oct 10 2024 09:32 IST
Image Source: Google

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிதிஷ் குமார் மற்றும் ரிங்கு ரிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 221 ரன்களை குவித்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ரன்களையும் சேர்க்க, ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 32 ரன்களைக் குவித்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட், தஸ்கின் அகமது, தன்சிம் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் மஹமதுல்லா மட்டும் தனி ஆளாகப் போராடி 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேசம் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து தோல்வி குறித்து பேசியுள்ள வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, “இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளைச் செய்தோம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இது எங்களுக்கு நல்ல விஷயம் அல்ல. நாங்கள் மேம்பட வேண்டும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீசுவதாக எடுத்த முடிவானது நல்லது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால்  6-7 ஓவர்களுக்குப் பிறகு அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர், அதன் பிறகு நாங்கள் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. அதேசமயம் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களும் பொறுப்பேற்க வேண்டும், நம் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் அவர்கள் சுவாரஸ்யமாக இருந்தது, ஆனால் நான் சொன்னது போல் எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை