எல் எல் சி 2022: நமன் ஓஜா காட்டடி; உலக ஜெயண்ட்ஸுக்கு 210 இலக்கு!

Updated: Sat, Jan 22 2022 21:54 IST
Image Source: Google

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் - உலக ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய மஹாராஜாஸ் அணியில் வாசிம் ஜாஃபர், சுப்ரமனியம் பத்ரிநாத் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 

இருப்பினும் தொடக்க வீரரான நமன் ஓஜா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி எதிரணி பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டார்.

அவருக்கு துணையாக கேப்டன் முகமது கைஃபும் அதிரடியாக விளையாடினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நமன் ஓஜா சதம் விளாச இந்திய அணி 200 ரன்களை எட்டியது. 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மஹாராஜாஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்தது. இதில் நமன் ஓஜா 69 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 140 ரன்களை விளாசினார். முகமது கைஃப் 53 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை