பாபர் அசாம், வில்லியம்சனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் - நாசின் ஹூசைன்!

Updated: Mon, Jun 12 2023 20:11 IST
Image Source: Google

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி எதிர்கொண்டது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய இந்திய அணி, 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து, மீண்டும் ஒரு முறை சாம்பியன் கோப்பையையும் தவறவிட்டது.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளுள் ஒன்றான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் போராட கூட முடியாமல் மிக மோசமான தோல்வியை சந்தித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இங்கிலாந்து வீரரான நாசிர் ஹூசைன், இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேச்ய அவர், “இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் உண்மையில் ஏமாற்றம் அளிக்கிறது. இதைக்கூறுவதால் அவர்களின் ரசிகர்கள் என்னை விமர்சிக்கலாம், இருப்பினும் நான் இதை கூறுகிறேன். இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள், பந்து நகரும் போது வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டுமென பாபர் அசாம் மற்றும் கேன் வில்லியம்சனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் அப்படியான தருணங்களில் பந்தை மிகவும் தாமதமாக விளையாடுவார்கள் ” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை