ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!

Updated: Fri, Feb 07 2025 09:25 IST
Image Source: Google

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, குசால் மெண்டிஸ் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார். 

இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடரவுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அதன்படி இலங்கை அணிக்கு எதிரான இப்போட்டியில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளை கைப்பாற்றியதன் மூலம் ஆசியாவில் அவர் தனது 150 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் ஆசியாவில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியரல்லாத பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே 127 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆசியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசியரல்லாத பந்து வீச்சாளர்கள்:

  • 150 விக்கெட்டுகள் - நாதன் லையன் (ஆஸ்திரேலியா)
  • 127 விக்கெட்டுகள் - ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா)
  • 98 விக்கெட்டுகள் - டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)
  • 92 விக்கெட்டுகள் - ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)
  • 92 விக்கெட்டுகள் - டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா)

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 550 விக்கெட்டுகள் என்ற மைல் கல்லை எட்ட நாதன் லையனிற்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவை. இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 136 டெஸ்ட் போட்டிகளில் 252 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நாதன் லையன் 549 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக ஷேன் வார்ன் மற்றும் கிளென் மெக்ராத் மட்டுமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை