உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வரலாறு படைத்த நாதன் லையன்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணியானது இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விலையாடிய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் ஒரு சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
அந்தவகையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் நாதன் லையன் வீழ்த்தினார். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றதுடன், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையைப் படைத்திருந்த நிலையில், தற்போது நாதன் லையன் 49 டெஸ்ட் போட்டிகளில் 87 இன்னிங்ஸ்களில் 201 விக்கெட்டுகளை கைப்பற்றி தற்போது முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்தப் பட்டியலில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 195 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்ராம் இடத்தில் உள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்
- நாதன் லியோன் - 201 விக்கெட்டுகள்
- பாட் கம்மின்ஸ் - 200 விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் - 195 விக்கெட்டுகள்
- மிட்செல் ஸ்டார்க் - 168 விக்கெட்டுகள்
- ஜஸ்பிரித் பும்ரா - 156 விக்கெட்டுகள்
Also Read: Funding To Save Test Cricket
இது தவிர, நான்காவது நாளின் முதல் செஷனில், முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் இரண்டிலும் தினேஷ் சண்டிமாலின் இரண்டு விக்கெட்டுகளை நாதன் லையன் கைப்பற்றி இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் ஒரு அமர்வில் ஒரு பேட்ஸ்மேனை இரண்டு முறை அவுட்டாக்கிய முதல் பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் நாதன் லையன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.