இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது - ரோஜர் பின்னி!

Updated: Fri, Oct 21 2022 06:44 IST
Image Source: Google

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் பாகிஸ்தான் பயணம் குறித்து பிசிசிஐயின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜர் பின்னி பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய அணி எங்கு செல்ல வேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது. இந்திய அணி வேறு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அல்லது வேறு நாடுகள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வந்தாலும் அதற்கு நாங்கள் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அந்த முடிவை நாங்கள் சொந்தமாக எடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை