மிதாலி ராஜுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு!
விளையாட்டு துறையில் உயரிய விருது கேல் ரத்னா விருது. ஆண்டுதோறும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான விருது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அவர்கள் அனைவருக்கும் வரும் 13ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான மிதாலி ராஜும் ஒருவர். மகளிர் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தமது சேவையை செய்து, பல சாதனைகளை படைத்ததின் காரணமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்ட 12 பேருக்கு இந்தாண்டு கேல் ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.
Also Read: T20 World Cup 2021
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது - 2021
- நீரஜ் சோப்ரா (தடகளம்)
- ரவிக்குமார் (மல்யுத்தம்)
- லவ்லினா (குத்துச்சண்டை)
- ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)
- அவானி லெக்ரா (பாரா துப்பாக்கி சுடுதல்)
- சுமித் ஆன்டில் (பாரா - தடகளம்)
- பிரமோத் பகத் (பாரா - பேட்மிண்டன்)
- கிருஷ்ணா நகர்(பாரா - பேட்மிண்டன்)
- மணீஷ் நர்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்)
- மிதாலி ராஜ் (கிரிக்கெட்)
- சுனில் சேத்ரி (கால்பந்து)
- மன்பிரீத் சிங் (ஹாக்கி)