சூர்யகுமார் யாதவால் பல பந்துவீச்சாளர்களுக்கு ஆபத்து உண்டு - ஆஷிஸ் நெஹ்ரா!
இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். தற்போது, 32 வயதான சூரியகுமார் தற்போது டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக வளம் வருகிறார். ஆனால் சூரிய குமாரை ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதுவரை 20 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சூர்யகுமார் வெறும் 43 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 28 ரன்கள் தான்.
சூரிய குமாரியாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2 அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். இந்த நிலையில் சூரிய குமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கியமான வீரராக வாய்ப்பிருப்பதாக ஆஷிஸ் நெஹ்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சூரியகுமார் தன்னுடைய பார்மை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என நான் நம்புகிறேன். ஏனென்றால் அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அவர் சில ஒரு நாள் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஒரு நாள் கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தி அவருக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இதனால் பல வீரர்கள் அவர்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி தங்களுடைய ஆட்டத்திறனை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் அவருடைய இடத்தை சூரிய குமார் யாதவ் பிடித்துக் கொள்ள தயாராக இருக்கிறார். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரராக ஐசிசி விருது வழங்கி இருப்பது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் சூரிய குமார் யாதவ் மட்டும் தான் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.
தொடர்ந்து இதே போன்ற பார்மை அவர் வெளிப்படுத்துவார் என நான் நம்புகிறேன். பெரிய ஸ்ட்ரைக் ரைட்டை வைத்து தொடர்ந்து ரன் குவிப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. சூரிய குமார் யாதவ்க்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இப்படி விளையாடுவது நிச்சயம் பெரும் சாதனையாகவே நான் கருதுகிறேன். டி20 கிரிக்கெட் இருக்கும் பல அதிரடி வீரர்களை சூர்யகுமார் யாதவ் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.