கரோனா தடுப்பூசி: ஆர்வம் காட்டும் சர்வதேச வீரர்கள்!

Updated: Tue, May 18 2021 09:24 IST
Image Source: Google

கரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ருத்ரதாண்டவமாடி வருகிறது. 

இதையடுத்து கரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட வீரர்களும் தங்களது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

மேலும்  நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், நேபாள அணியின் நம்பிக்கை நட்சத்திர சந்தீப் லமிச்சானே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஆகியோர் இன்று தங்களது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் இது குறித்து சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பதிவில்,“நான் இன்று எனது முதல் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டேன். தயவுசெய்து நீங்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள். தற்போது 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை