நேபாள், நமீபியா அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணியும் பிற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது.
அந்த வகையில் நெதர்லாந்து அணி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நேபாள் மற்றும் நமிபியா அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரிலும் நெதர்லாந்து அணி விளையாடவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான நெதர்லாந்து அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நெதர்லாந்து அணியின் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் மேக்ஸ் ஓடவுட், விக்ரம்ஜித் சிங், ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், வெஸ்லி பரேசி, தேஜா நிடமனுரு போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
நெதர்லாந்து ஒருநாள் அணி: மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜித் சிங், நோவா குரோஸ், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், மைக்கேல் லெவிட், விவியன் கிங்மா, வெஸ்லி பாரேசி, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப், வான் டெர் மெர்வே, பாஸ் டி லீட், கைல் க்ளீன், ஒலிவியர் எலன்பாஸ்.
நெதர்லாந்து டி20 அணி: மேக்ஸ் ஓ'டவுட், விக்ரம்ஜித் சிங், நோவா குரோஸ், ஷாரிஸ் அகமது, ஆர்யன் தத், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ், மைக்கேல் லெவிட், விவியன் கிங்மா, வெஸ்லி பாரேசி, சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான்டர், ஃபிரெட் கிளாசென், கைல் க்ளீன், டிம் வான் டெர் குக்டன், டேனியல் டோரம் (ரிசர்வ் வீரர்).
போட்டி அட்டவணை
- பிப்ரவரி 15 - நேபாளம் vs நமீபியா ஒருநாள்
- பிப்ரவரி 17 - நமீபியா vs நெதர்லாந்து ஒருநாள்
- பிப்ரவரி 19 - நேபாளம் vs நெதர்லாந்து ஒருநாள்
- பிப்ரவரி 21 - நமீபியா vs நேபாளம் ஒருநாள்
- பிப்ரவரி 23 - நெதர்லாந்து vs நமீபியா ஒருநாள்
- பிப்ரவரி 25 - நெதர்லாந்து vs நேபாளம் ஒருநாள்
- பிப்ரவரி 27 - நேபாளம் vs நமீபியா டி20
- பிப்ரவரி 29 - நெதர்லாந்து vs நமீபியா டி20
- மார்ச் 1 - நமீபியா vs நேபாளம் டி20
- மார்ச் 2 - நேபாளம் vs நெதர்லாந்து டி20
- மார்ச் 3 - நமீபியா vs நெதர்லாந்து டி20
- மார்ச் 5 - டி20 முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி