NED vs NZ, 1st T20I: டிக்னர், சீயர்ஸ் அபாரம்; நெதர்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

Updated: Fri, Aug 05 2022 11:01 IST
Image Source: Google

நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஹேக்கில் நடைபெற்று வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், தனே கிளெவர், டெரில் மிட்செல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.  

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மார்ட்டின் கப்தில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் 13, அதிரடியாக விளையாடிய ஜேம்ஸ் நீஷம் 32 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இரண்டி சிக்சர்கள், ஒரு பவுண்டரியை விளாசிய இஷ் சோதியும் 19 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வேன் பீக், ஷாரிஸ் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய நெதர்லாந்து அணியில் ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவுட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதன்பின் களமிறங்கிய பாஸ் டி லீட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் கடைசிவரை போராடிய பாஸ் டி லீட் மட்டும் 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் 19.3 ஓவர்கள் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் பிளெர் டிக்னர் 4 விக்கெட்டுகளையும், பென் சீயர்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை