பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லேதம் - சாட் பௌஸ் களமிறங்கினார். இதில் சாட் பௌஸ் 7 ரன்களிலும், வில் யங் 17 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டாம் லேதம் - டெரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லேதம் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெரில் மிட்செல் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த டாம் லேதம் 64 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 6 ரன்களிலும், கேப்டன் பாபர் ஆசாம் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஃபகர் ஸமான் 17 ரன்களிலும், சைம் அயூப் 10 ரன்களிலும், ஷதாப் கான் 16 ரன்களிலும், இமாத் வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய இஃப்திகார் அகமது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் 20 பந்துகளில் அரைசதம் கடந்துடன், 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 60 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். 

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே, ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், 1-2 என்ற கணக்கில் தொடரிலும் நீடித்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News