ENG vs NZ, 2nd Test: நியூசிலாந்து பயிற்சியாளர் வருத்தம்!

Updated: Fri, Jun 10 2022 14:13 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி அட்டகாசமான கம்பேக் கொடுத்த போதும், முதல் டெஸ்டில் வெற்றியை பெற முடியவில்லை. 

எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் தான் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அவருக்கு அறிகுறிகள் தென்பட்டதால் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா உறுதியானது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார். இன்று தொடங்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக செயல்படவுள்ளார்.

இங்கிலாந்து டூரில் நியூசிலாந்து அணியில் 4ஆவது வீரராக கேன் வில்லியம்சனுக்கு கரோனா உறுதியாகியுள்ளது தான் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தின் போதே 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது வில்லியம்சன் பாதித்துள்ளதால், பரிசோதனையில் எதாவது தவறு இருக்குமோ என நியூசிலாந்து அணிக்குள்ளேயே குழப்பம் உண்டாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “ஒரு முக்கியமான போட்டியில் இருந்து வில்லியம்சனை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது மிகவும் வெட்கக்கேடான செயல். இதனால் அவர் எவ்வளவு மன உளைச்சலில் இருப்பார் என எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. வருத்தமாக இருக்கிறது” என அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை