நியூசிலாந்து vs இங்கிலாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Oct 31 2022 22:23 IST
Image Source: Google

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் குரூப் இரண்டிலிருந்து இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் குரூப் 1இல் தான் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

நியூசிலாந்து அணி 3 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளையும், ஆஸ்திரேலிய  அணி 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளையும், இங்கிலாந்து அணி 3 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது. நாளை பிரிஸ்பேனில் நடக்கும் முக்கியமான போட்டியில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதுகின்றன. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுமே 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகள் என்ற நிலையில் இருக்கும். 3 அணிகளில் கடைசி போட்டியில் வெல்லும் 2 அணிகள் அல்லது 3 அணிகளும் கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ஒருவேளை நாளைய போட்டியில் நியூசிலாந்து ஜெயித்தால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு வலுவாகும். எனவே நாளை பிரிஸ்பேனில் நடக்கும் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான போட்டி மிக முக்கியமான போட்டி. 

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஃபின் ஆலன், டெவான் கான்வே, டெரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், டிம் சௌதி, ட்ரெண்ட் போல்ட், லோக்கி ஃபர்குசன் ஆகியோரும் இருப்பது அணிக்கும் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் பட்லர், ஹேல்ஸ், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் பேட்டிங்கிலும், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், மார்க் வுட் ஆகியோரும் இருப்பது அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இங்கிலாந்து
  • இடம் - கபா கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 22
  • இங்கிலாந்து - 12
  • நியூசிலாந்து - 08
  • முடிவில்லை - 02

உத்தேச அணி

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், மொயின் அலி, சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வுட்

நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஜோஸ் பட்லர், டெவோன் கான்வே
  • பேட்டிங்: ஃபின் ஆலன், க்ளென் பிலிப்ஸ், டேவிட் மலான்
  • ஆல்-ரவுண்டர்: லிவிங்ஸ்டோன், சாம் குரான், மிட்செல் சான்ட்னர்
  • பந்துவீச்சு: டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, மார்க் வூட்

*. This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை