நியூசிலாந்து vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Nov 24 2022 15:23 IST
New Zealand vs India, 1st ODI – NZ vs IND Cricket Match Prediction, Where To Watch, Probable XI And (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (நவம்பர் 25) பகல்-இரவாக ஆட்டமாக நடக்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இந்தியா
  • இடம் - ஈடன் பார்க் மைதானம், ஆக்லாந்து.
  • நேரம் - காலை 7 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் டி20 தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தவான் தலைமையில் இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது நியூசிலாந்து தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

அதேபோல் டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ஒருநாள் தொடரில் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவார். தவானும், சுப்மன்கில்லும் தொடக்க வரிசையில் விளையாடுவார்கள். அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்கிறார். தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் மிடில் வரிசையில் ஆடுவார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் சாதிக்க கூடியவர்கள். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து 2 சுழற்பந்து வீரர்கள் இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷபாஸ் அகமது உள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின்ஆலன், பிரேஸ்வெல், ஹென்றி, பிலிப்ஸ், சான்ட்னெர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஏற்கெனவே அந்த் அணி சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் தொடரை கைப்பற்றும் வேட்டையில் உள்ளது.

ஆனாலும் மார்ட்டின் கப்தில், டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இடம் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் கடந்து நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -114
  • நியூசிலாந்து - 49
  • இந்தியா - 55
  • முடிவில்லை - 10

போட்டியைக் காணுவது எப்படி?

இப்போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது. இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை தூர்தர்ஷனிலும் கண்டுகளிக்கலாம்.

உத்தேச அணி

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி ஃபர்குசன்.

இந்தியா - ஷிகர் தவான் (கே), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஷுப்மான் கில், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.

ஃபேண்டஸி லெவன்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை