நியூசிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Nov 17 2022 22:02 IST
New Zealand vs India, 1st T20I – NZ vs IND Cricket Match Prediction, Where To Watch, Probable XI And (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை முடிந்துள்ள நிலையில், அடுத்து இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்துக்கு சென்று, அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

இதில் டி20 தொடர் நவம்பர் 18, 20, 22 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் தொடர் நவம்பர் 25, 27, 30 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. டி20 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு துவங்கும். ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு துவங்கும்.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இந்தியா
  • இடம் - ஸ்கை மைதானம், வெலிங்டன்
  • நேரம் - மதியம் 12 மாணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி,கேஎல் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடருக்கான இந்திய டி20 அணிக்கு கேப்டனான ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.ரிஷப் பந்திற்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற இளம் பேட்டர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ஸ்பின்னர் சஹல், குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவி, உம்ரான் மாலிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை செட்டாகி விட்டது. இருப்பினும், பந்துவீச்சில்தான் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், அதற்கு இப்போதிருந்தே பந்துவீச்சு துறையை தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது.

ஆவேஷ் கான் தனது திறமையை நிரூபித்துவிட்டதால், நியூசிலாந்து தொடரில் அவருக்கான இடம் உறுதியாகிவிட்டது. புவனேஷ்வர் குமார் இத்தொடரில் தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால், அடுத்து இடமே கிடைக்காது. இதனால், இத்தொடர் அவருக்கு மிகமுக்கியமானதாக இருக்கிறது. ஹார்திக் பாண்டியாவும் புல் கோட்டாவில் பந்துவீச துவங்கிவிட்டார்.

மீதம் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம் மட்டுமே காலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு உம்ரான் மாலிக், ஹர்ஹல் படேல், முகமது சிராஜ் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இதில் உம்ரான் மாலிக் இந்திய அணியில் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். இதனால், இவரை புறக்கணிப்பது கடினம்.

அதேபோல் ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோர் ரெகுலராக இந்திய அணியில் இடம்பிடித்தாலும், அவ்வபோதுதான் லெவன் அணியில் விளையாடுகிறார்கள். இதனால், இவர்களுக்கும் போதிய அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது.

அதே நேரத்தில் கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். அந்த அணியும் உலக கோப்பையில் அரை இறுதி வரை சென்று பாகிஸ்தானிடம் தோற்றது.

அன்ந்த அணியில் கிளென் பிலிப்ஸ், டெவான் கான்வே, லோக்கி ஃபர்குசன், ஜிம்மி நீசம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். ஆனால் நட்சத்திர வீரர்களான மார்ட்டின் கப்தில், ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் வாய்ப்ப வழங்கப்படாதது பெரும் பின்னடைவாக பார்க்கபடுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • இந்தியா - 09
  • நியூசிலாந்து - 09
  • முடிவில்லை - 02

போட்டியை எப்படி காணுவது?

இப்போட்டிக்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் பெற்றுள்ளது. இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை தூர்தர்ஷனிலும் கண்டுகளிக்கலாம்.

உத்தேச அணி

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி ஃபர்குசன், டிம் சௌதி, இஷ் சோதி, ஆடம் மில்னே.

இந்தியா - ஷுப்மன் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஃபின் ஆலன், டெவான் கான்வே
  • பேட்டர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர், கிளென் பிலிப்ஸ், சூர்யகுமார் யாதவ்
  • ஆல் ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, டெரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், லோக்கி ஃபர்குசன், புவனேஷ்வர் குமார்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை