மகளிர் டி20: நீயூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா!
இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20,5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூசி பேட்ஸ் 36 ரன்களைச் சேர்த்தார். இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ரேகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா 13, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுன் 12 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய யாஸ்திகா பாடியாவும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் காமிறங்கிய மேஹனா அதிரடியாக விளையாடி 37 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீராங்கனைகள் ரன் சேர்க்க தவறியதால் இந்திய அணி 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் நீயூசிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.