ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
New Zealand Women vs South Africa Women Prediction, ICC Women's World Cup 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும் ஏழாவது லீக் போட்டியில் சோஃபி டிவைன் தலைமையிலன நியூசிலாந்து அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
NZ-W vs SA-W, ICC Women's World Cup 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர்
- இடம் - ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
- நேரம்- அக்டோபர் 06, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)
Holkar Cricket Stadium, Indore Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 8 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 2 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 331 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 418 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
NZ-W vs SA-W ODI Head To Head Record
- மோதிய போட்டிகள்- 20
- நியூசிலாந்து- 12
- தென் ஆப்பிரிக்கா - 08
NZ-W vs SA-W, ICC Women's World Cup 2025: Where to Watch?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
NZ-W vs SA-W, ICC Women's World Cup 2025: Player to Watch Out For
நியூசிலாந்து அணிக்காக அமெலியா கெர், சோஃபி டெவின் மற்றும் ஜெஸ் கெர் ஆகியோர் நட்சத்திர வீராங்கனைகளாக இருக்கலாம். தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை, மரிசேன் காப், தாஸ்மின் பிரிட்ஸ் மற்றும் லாரா வோல்வார்ட் ஆகியோர் தங்கள் செயல்திறன் மூலம் ஈர்க்கப்படலாம்.
New Zealand Women vs South Africa Women Probable Playing XI
New Zealand Women Probable Playing XI: சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ப்ரீ இல்லிங், லியா தஹுஹு
South Africa Women Probable Playing XI: லாரா வோல்வார்ட் (கேப்டன்), மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், நதின் டி க்ளெர்க், சோலே டிரையோன், கரபோ மெசோ, அன்னேரி டெர்க்சன், சுனே லூஸ், மசபடா கிளாஸ், நோண்டுமிசோ ஷங்கேஸ், அயபோங்கா காக்கா
New Zealand Women vs South Africa Women Today's Match Prediction
2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் ஏழாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள அணியாக இருக்கும்.
Also Read: LIVE Cricket Score
NZ-W vs SA-W Match Prediction, NZ-W vs SA-W Pitch Report, NZ-W vs SA-W Predicted XIs, ICC Women's World Cup 2025, Today's Match NZ-W vs SA-W, NZ-W vs SA-W Prediction, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, New Zealand Women vs South Africa Women