230 ஆண்டுகால லாட்ர்ஸ் வரலாற்றில் இரட்டைச் சதமடித்து சரித்திரம் படைத்த டேவன் கான்வே!

Updated: Thu, Jun 03 2021 20:04 IST
New Zealand's Devon Conway scripted history by slamming the highest score by a batsman on Test debut (Image Source: Google)

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.

அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் டேவன் கான்வே - டாம் லேதம் இணை களமிறங்கியது. இதில் லேதம், வில்லியம்சன், டெய்லர் என ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடி காட்டிய கான்வே தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இதன் மூலம் டேவன் கான்வே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். அதாவது நேற்று அறிமுக வீரராக களமிறங்கிய டெவன் கான்வே 136 நாட் அவுட் என்று முதல்நாளை முடித்தார், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு வீரர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரான இந்தியாவின் சவுரவ் கங்குலியின் 131 ரன்கள் என்ற 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் கான்வே.

தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட டேவன் கான்வே 150 ரன்களை கடந்து அசத்தினார். பின்னர் ஒரு சமயத்தில் நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆகிவிடும் என நினைக்கையில், கடைசி விக்கெட்டுக்கு நெய்ல் வாக்னர், டேவன் கான்வே வுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைதார். 

இதன் மூலம் டேவன் கான்வே சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்ததுடன், 230 ஆண்டுகால லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை தன்வசப்படுத்தினார். 

மேலும் நியூசிலாந்து அணி தரப்பில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதேசமயம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் 

  • டேவன் கான்வே - 200 ரன்கள் - 2021 ஆம் ஆண்டு
  • சவுரவ் கங்குலி -131 ரன்கள்- 1996ஆம் ஆண்டு
  • மாட் பிரேயர் -126 ரன்கள்- 2007ஆம் ஆண்டு
  • ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் -112 ரன்கள்  - 2004 ஆம் ஆண்டு
  • ஹாரி கிரகாம் -107 ரன்கள் - 1893 ஆம் ஆண்டு
  • ஜான் ஹாம்ப்ஷயர்- 107 ரன்கள்- 1969ஆம் ஆண்டு

தற்போது டெவன் கான்வே அறிமுக லார்ட்ஸ் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை