இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல - விராட் கோலி

Updated: Sat, Aug 12 2023 12:49 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட்டில் வெளியே விளம்பரங்கள் மூலமாக ஸ்பான்சர்ஷிப்புகள் மூலமாக மிகப்பெரிய அளவில் சம்பாதித்த வீரராக முதலில் உருவெடுத்தவர் சச்சின் டெண்டுல்கர்தான். அவர் பக்கத்தில் அப்பொழுது உலக கிரிக்கெட்டில் ஒருவர் கூட கிடையாது. இதற்கு அடுத்து கிரிக்கெட் மிகப்பெரிய வணிக ரீதியான விளையாட்டாக மாற மாற, கிரிக்கெட்டுக்கு வெளியே இருந்து வீரர்களுக்கு பணம் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலமாக கிடைக்க ஆரம்பித்தது.

இதில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் சம்பாதித்தவர் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி. சமீபத்தில் அவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதேபோல மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்தியாவிலிருந்து கிரிக்கெட்டுக்கு வெளியே நிறைய சம்பாதித்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி உருவானார். 

அவருடைய சொத்து மதிப்பையும் ஆயிரம் கோடியை தாண்டி வளர்ந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஒரு பதிவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி இருவருக்கும் அடுத்து மூன்றாவதாக அதிகமாக ஒரு பதிவுக்கு பணம் வாங்கக் கூடியவராக விராட் கோலி இருக்கிறார், அவர் ஒரு பதிவுக்கு 11.5 கோடி வாங்குகிறார் என்ற தகவல் சமீபத்தில் பரவி இருந்தது.

இந்த நிலையில் இன்று விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதற்கான மறுப்பை தெரிவித்திருக்கிறார். இடுகுறித்ட் பேசிய அவர் “வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றி உள்ளவனாக கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் நான் சமூக வலைதளத்தில் ஒரு பதிவுக்கு வாங்கும் பணம் தொடர்பாக செய்திகள் உண்மையல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் விராட் கோலியின் இந்த ட்விட்டர் பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை