பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட்டாக இல்லை - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 37 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனிகெத்வர்மா 18 ரன்களையும் சேர்த்தான்ர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரஹித் சர்மா 26 ரன்களையும், ரியான் ரிக்கல்டன் 31 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களையும், வில் ஜேக்ஸ் 36 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “இது பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட்டாக இல்லை. அதனால் நாங்கள் நினைத்த இலக்கை எங்களால் நிர்ணயிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் சிறப்பாக பந்துவீசியதன் காரணமாக எங்கள் பேட்டர்களால பெரிய ஷாட்டை விளையாட முடியவில்லை. நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு போராடியதன் காரணமாக 160 ரன்களை எட்ட முடிந்தது.
Also Read: Funding To Save Test Cricket
இந்த மைதானத்தில் இந்த இலக்கை கட்டுப்படுத்துவது கடினம் என்பது தெரியும், இருப்பினும் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்தோம். அதிலும் எங்களுக்கு விக்கெட்டுகள் தேவை என்று நினைத்தோம், எங்களிடம் நிறைய டெத் பவுலிங் தேர்வுகள் இருந்தது. அதன் காரணமாக இப்போட்டியில் ராகுல் சஹாரை நாங்கள் இம்பேக் வீரராக களமிறக்கினோம். ஆனால் எங்களுடைய திட்டங்கள் கைகொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.