ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!

Updated: Thu, Feb 29 2024 15:59 IST
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்! (Image Source: Google)

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.

இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. 

இதன் காரணமாக முதல் இரு வாரத்திற்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களது கேப்டன் மற்றும் துணைக்கேப்டனை இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்திய வீரர் கேஎல் ராகுல் கேப்டனாகவும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

கடந்த சீசனிலும் கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் அவர் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயெ வெளியேறினார். இதன் காரணமாக இந்திய வீரர் குர்னால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் விளையாடிய லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது. 

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஐஎல்டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை வழிநடத்திய நிக்கோலஸ் பூரன் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளதால் அவரை தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாகவும் அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை