kl rahul nicholas pooran
ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்டை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஏல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் தீபக் ஹூடாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, லக்னோ அணி 69 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on kl rahul nicholas pooran
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்!
மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவது சந்தேகம்?
ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஓர் பார்வை!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தலைமையில் நடப்பு ஐபிஎல் சீசனை எதிர்கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம், பலவீனம், அணி விவரம் மற்றும் போட்டி அட்டவணையை இப்பதிவில் விரிவாக பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டினார் கேஎல் ராகுல்; லக்னோ ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய வீரர் கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடருக்குள் கேஎல் ராகுல் உடற்தகுதியை எட்டுவார்; தகவல்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல், ஐபிஎல் தொடருக்குள் முழு உடற்தகுதியை எட்டுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24