பிரையன் லாராவின் வாழ்நாள் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!

Updated: Wed, Aug 28 2024 10:51 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் 4 ஓவர்களை விளையாடிய நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் இப்போட்டியானது 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து பேட்டிங்கைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடியதன் மூலம், 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து108 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமகா டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 40 ரன்களைச் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் அலிக் அதானாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், ஷாய் ஹோப் 42 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 35 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 9.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று  போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய சாதனை ஒன்றை பதிவுசெய்து அசத்தியதோடு, முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவையும் பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்படி, ​​சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் 221 சிக்ஸர்களை விளாசி மூன்றாம் இடத்தில் இருந்த பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி 224 சிக்சர்களுடன் நிக்கோலஸ் பூரன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலின் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 563 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், கீரென் பொல்லார்ட் 234 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை