டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!

Updated: Fri, Apr 11 2025 22:33 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இதன் காரணமாக, இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட்டில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

அதன்படி இந்தப் போட்டியில் நிக்கோலஸ் பூரான் 70 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களை நிறைவு செய்வார். இதுவரை அவர் 389 போட்டிகளில் 363 இன்னிங்ஸ்களில் 8930 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை, டி20 கிரிக்கெட்டில் மூன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே இந்த எண்ணிக்கையை எட்ட முடிந்தது. அந்தவகையில் கிறிஸ் கெயில், கீரோன் பொல்லார்ட் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் மட்டும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் உலகளவில் இந்த மைல் கல்லை எட்டும் 26ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். நடப்பு ஐபிஎல் சீசனில் நிக்கோலஸ் பூரான் அற்புதமான ஃபார்மில் உள்ளார். இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில், அவர் 72 என்ற சராசரியுடன் 288 ரன்களை எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Lucknow Super Giants vs Gujarat Titans Probable Playing XI

Lucknow Super Giants Probable Playing XI: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், டேவிட் மில்லர், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங்.

இம்பேக்ட் வீரர் - ரவி பிஷ்னோய்.

Gujarat Titans Probable Playing XI: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Also Read: Funding To Save Test Cricket

இம்பாக்ட் வீரர் - குல்வந்த் கெஜ்ரோலியா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை