தொடர் தோல்வி எதிரொளி: கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் நிக்கோலஸ் பூரன்!

Updated: Tue, Nov 22 2022 10:06 IST
Nicholas Pooran quits West Indies white-ball captaincy after World Cup debacle (Image Source: Google)

கடந்த மே மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கீரேன் பொல்லார்ட் விலகினார்.இதனைத் தொடர்ந்து ஒருநாள், டி20 அணிக்கு நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 15 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

அதுமட்டுமல்ல டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக படுமோசமாக சொதப்பி தோற்று, லீக் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறி, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்த மாபெரும் வரலாற்று தோல்விகள் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து நிகோலஸ் பூரன் நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பூரன், “என்னை நம்பிதான் கேப்டன் பதவி கொடுத்தார்கள். சிறப்பாக செயல்பட முடியும் என என்மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், டி20 உலகக் கோப்பையில் சொதப்பி, சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேறாதது நிச்சயம் எனது கேப்டன்ஸிக்கும், அணிக்கும் பெரும் பின்னடைவுதான். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டேன். உண்மையாக உழைத்தேன். கேப்டன் பதவி வழங்கிய மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி. அணியின் நலனுக்காகத்தான் என்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்” எனக் கூறினார்.

மேலும் பூரன் கேப்டன்ஸியில் மட்டும் சொதப்பவில்லை. இவர் கடந்த 10 டி20 இன்னிங்ஸ்களில் 94 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். குறிப்பாக, டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் 5,7,3 என ரன்களை சேர்த்து படுமோசமாக சொதப்பியிருக்கிறார்.

பூரனின் இந்த சொதப்பல் காரணமாக, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ஏலத்திற்கு முன்னதாகவே கழற்றிவிட்டுள்ளது. கடந்த சீசனின் இவரை 10.75 கோடிக்கு அந்த அணி வாங்கியிருந்தது.

இந்நிலையில் நிக்கோலஸ் பூரனுக்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி20 அணிக்கு ரோவ்மன் பாவெல் கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் பூரன் கேப்டன்ஸியில் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை