SL vs NZ, 2nd Test: இலங்கை பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அண்மையில் கலேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கொண்டு இப்போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் இலங்கை அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மூன்றாம் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியோ 42 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (செப்.26) நடைபெறவுள்ளது.
அதன்படி இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கலேவில் உள்ள கலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை வெல்லும் என்பதாலும், நியூசிலாந்து அணி தொடர் இழப்பை தவிர்க்க போராடும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இப்போட்டிக்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இலங்கை அணியில் அறிமுக வீரர் நிஷான் பெய்ரிஸ் வாய்ப்பு பெற்றுள்ளார். மேற்கொண்டு இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு பதிலாக மிலன் ரத்நாயக்கவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை பிளேயிங் லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, பிரபாத் ஜெயசூரிய, நிஷான் பெய்ரிஸ், அசிதா ஃபெர்னாண்டோ.