டெல்லி அணியிலிருந்து வெளியேறும் நிதிஷ் ராணா!

Updated: Sat, Aug 12 2023 13:24 IST
Image Source: Google

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான நிதிஷ் ராணா கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு முழுவதுமாக கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக கேப்டன்சி செய்வதற்கு முன்பாகவே டெல்லி மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இவரது தலைமையில் டெல்லி அணி ரஞ்சி கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடி வந்தது. அப்போது அவரின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகள் பாராட்டுக்களை பெற்ற வேளையில் கொல்கத்தா அணிக்காகவும் அவர் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது உள்ளூர் தொடர்களில் டெல்லி அணியில் இருந்து அவர் வெளியேற உள்ளார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதுவரை டெல்லி அணியின் கேப்டனாக விளையாடி வந்த அவருக்கு பதிலாக தற்போது இளம் வீரரான யாஷ் துல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு இந்திய ஏ அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் யாஷ் துல் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளதால் நிதிஷ் ராணா டெல்லி அணியின் நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் உள்ளார்.

இதனால் அவர் டெல்லி அணியில் இருந்து வெளியேறி வேறு மாநில அணிக்காக விளையாடும் முடிவையும் கையில் எடுத்துள்ளார். இதன் காரணமாக டெல்லி கிரிக்கெட் அசோஸியேஷனுக்கு என்ஓசி கேட்டு விண்ணப்பித்துள்ளார். மேலும் டெல்லி அணியில் இருந்து வெளியேறும் அவர் உடனடியாக வேறு ஏதாவது அணியுடன் இணைந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரோடு சேர்த்து துருவ் ஷோரேவும் டெல்லி அணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை